2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கிழக்கு பல்கலை மாணவர்களின் விரிவுரை பகிஷ்கரிப்பு தொடர்கின்றது

Super User   / 2012 ஜூன் 08 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் புதிதாக நியமிக்கப்பட்டவரை மாற்ற கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விரிவுரை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விரிவுரை பகிஸ்கரிப்பில் மட்டக்களப்பு நகரிலுள்ள சௌக்கிய பராமரிப்பு பீடமும் நேற்று வியாழக்கிழமை முதல் இணைந்துகொண்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுகூடலில், கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களுக்கமைவாக அருட் தந்தை சிறிதரன் சில்வெஸ்ரரின் இடத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டவரது நியமனம் உப வேந்தரின் பரிந்துரை எதுவுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை இரத்துச் செய்து பாதிரியார் சமூகத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் ஜுன் 11ஆம் திகதி நடைபெறவிருந்த பேரவை உறுப்பினர்களின் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவுரைப் பகிஸ்கரிப்பு குறித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.கிருஸ்ணானந்தை வினவியதற்கு, 'எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில்  பகிஸ்கரிப்பு தொடரும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .