2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கல்லடியில் பொலிஸ் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிதியனுசரணையுடன் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள புனித திரேசா வித்தியாலயத்தில் பொலிஸ் நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன் ஆரம்பிப்பு நிகழ்வில், மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செணவிரட்ன, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரி எம்.திஸாநாயக்க, அருட் தந்தை போல் சற்குணநாயகம் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான பாடசலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதேவேளை, பிறப்பு சான்றிதழ்கள், பொலிஸ் முறைப்பாட்டுப்பிரதிகள், தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இடம்பெற்றன.

கல்லடி சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சிலாமுனை, பார்விதி ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .