2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி எடுத்துச்செல்லப்பட்ட தேக்கு மர குற்றிகள் மீட்பு

Super User   / 2012 ஜூன் 10 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


 ஏறாவூர், சந்தனமடு ஆற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அனுமதிப்பத்திரமின்றி எடுத்துச்செல்லப்பட்ட பெருந்தொகையான தேக்கு மரக்குற்றிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை  ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்ட தேக்கு மர குற்றிகள் மற்றும் மூன்று மாட்டு வண்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இதன்போது மூன்று பேர் சந்தேகத்திக் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை திங்கட்கிழமை ஏறாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • Nithiyanathan Tuesday, 12 June 2012 05:42 AM

    நல்லம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .