2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கட்டிட ஒப்பந்த காரர்களுக்கான செயலமர்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 11 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கட்டிட ஒப்பந்த காரர்களுக்கு 10 தினங்களாக மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட பயிற்சி செயலமர்வின் இறதி நாள் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

உயர் தர நிர்மான பயிற்சி நிறுவனமான அக்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜி.ஐ.சட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் கே.விமலநாதன், ஜி.ஐ.சட் நிறுவனத்தின் செயற்திட்ட முகாமையாளர் எஸ்.எல.அமரசூரிய, அக்டா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.சி.ஏ.அமரசூரிய, கிழக்கு மாகாண சபையின் பொறியியல் பகுதிக்கான பிரதி செயலாளர் கே.பாஸ்கரன், ஜி.ஐ.சட் நிறுவனத்தின் இணைப்பாளர் எம்.தயானந்தன், மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பிரதம பொறியியலாளர் எம்.மோகனராஜ் உட்பட அதிகாரிகள், கட்டிட ஒப்பந்த காரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இப்பயிற்சி செயலமர்வை நிறைவு செய்த 22 கட்டிட ஒப்பந்த காரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .