2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

அருகிவரும் கிடுகு பின்னும் கைத்தொழில்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 11 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


கிழக்கு மாகாணத்தின் பிரதான கைத்தொழில்களில் ஒன்றான கிடுகு பின்னும் கைத்தொழில் அருகிவருவதால் இத்தொழிலில் ஈடுபட்டுவந்த பெருமளவான மக்கள் வருமானத்தை இழந்து கஷ்டத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

தென்னை மரத்திலிருந்து விழும் காய்ந்த ஓலைகளை  இரு தினங்களுக்கு நீரில் ஊறவைத்து மூன்றாவது நாள் ஊறவைத்த ஓலைகளை கிடுகுகளாகப் பின்னி குடிசைகள் அமைத்தல், வேலி அமைத்தல், கூரை மேய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. 

தற்போது  கிடுகுகளுக்குப் பதிலாக ஓடுகளும் செங்கல்லுகளும்  பயன்படுத்தப்படுவதால் கிடுகு விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தினமொன்றிற்கு    25 முதல் 30 வரை கிடுகுகளைப் பின்னியவர்கள் தற்போது தினமும் 10 முதல் 15 வரையே பின்னுகின்றனர். கிடுகொன்று  18 ரூபா முதல் 20 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இவைகளையும் விற்பனை செய்வதில் கஷ்டங்கள் உள்ளதாக கிடுகு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .