2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கல்லடி வலயத்திற்குட்பட்ட குடும்பங்களுக்கு கோழி குஞ்சு வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 12 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
மக்களின் மனை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திவிநெகும வேலைத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கான கோழி குஞ்சு வழங்கும் வேலைத்திட்டம் கல்லடி வலய அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதேச சமுர்த்தி முகாமையாளர் தங்கத்துரை கலந்து கொண்டு கோழிக் குஞ்சுகளை வழங்கி வைத்தார். இதன்போது பிரதேசத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வறிய நிலையில் உள்ள 20 குடும்பங்களுக்கு முட்டையிடும் ஒரு மாத அளவிலான கோழிக் குஞ்சுகள் இதன்போது வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .