2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கோயில் போரதீவில் த.ம.வி.பு கட்சியின் கிளை காரியாலாயம் திறப்பு

Kogilavani   / 2012 ஜூன் 12 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப் பிரதேசத்திற்கான கிளை காரியாலயம் கோயில் போரதீவில் நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்; செயலாளரும் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், பிரதேச அமைப்பாளரும் தவிசாளருமான சிறிதரன், கட்சியின் பொருளாளர் தேவராஜா மற்றும் கோயில் போரதீவு பிரதேசத்தின் கட்சி தொணடர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை மற்றும் எதிர்கால திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசத்திலும் தனது கிளை காரியாலயங்களை நிறுவி அதனூடாக மக்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் விரிவாக விளக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலையிலும் கட்சியின் கிளைக் காரியாலயங்கள் திறந்து வைப்படவுள்ளதாக கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .