2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பெண்களின் வாழ்வாதாரத்திற்கான சேதனப் பயிர்ச்செய்கை வேலை திட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 12 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள வவணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் கரடிப்புவல் மற்றும் பத்தரகட்ட கிராமங்களிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பு காவியா நிறுவனம் சேதனப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது.

காவியா நிறுவனம் சுவீடன் கூட்டுறவு நிலைய நிறுவனத்தின் உதவியுடன் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்;தி வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் இக் கிராமங்களிலுள்ள 27 குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காக மரங்கள் மற்றும் விதைகள், கூட்டுப்பசளை தயாரிப்பதற்கான பொருட்கள் என்பவற்றை மேற்படி காவியா நிறுவனம் நேற்று திங்கட்கிழமை வழங்கியது.

கரடிப்புவல் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், காவியா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார், சுவீடன் கூட்டுறவு நிலைய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன் உட்பட காவியா நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .