2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கு எதிரான விழிப்புணர் ஊர்வலம்

Kogilavani   / 2012 ஜூன் 12 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், கே.எஸ்.வதனகுமார்)

சிறுவர்களை வேலைக்கமர்த்துவதறகு எதிரான தினத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் சிறுவர்களின் விழிப்புணர்வு பேரணியொன்று நடைபெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்திய இவ் விழிப்புணர்வு பேரணி மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றது.

இதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதுடன் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கெதழரான சுலோகங்களையும் இவர்கள் தாங்கிச்சென்றனர்.

ஊரவலத்தை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கூட்டமொன்றும் நடைபெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .