2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

புதியகாத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் நிர்மாண வேலைகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

புத்தசாசன மதவிவகார கலாசார அமைச்சினால் மட்டக்களப்பு புதிய காத்தான்குடியில் 87 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பெரிய ஜும் அ பள்ளிவாயலின் நிர்மாண வேலைகளுக்கான ஒப்பந்தம் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இப்பள்ளிவாயலை நிர்மாணிக்கவுள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் சி.பி.சி நிறுவனத்தின் பணிப்பாளர் நீல் ரூபசிங்க மற்றும் புத்தசாசன மத விவகார கலாசார அமைச்சின் செயலாளர் சி.ஐ.சி ஹேரத் ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பிரதம மந்தியிரின் செயலாளர் எஸ்.அமரசேன திறைசேரியின் பணிப்பாளர், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.நவவி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பள்ளிவாயலின் கட்டிட வேலைகளுக்காக முதற்கட்ட நிதியாக இரண்டு கோடி ரூபா நேற்றைய தினம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .