2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மீன் பிடிக்கச் சென்றவர் யானை தாக்கி மரணம்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சந்தனமடு ஆற்றுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் களுவன்கேணியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (32 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் நேற்று அதிகாலை களுவன்கேணியிலிருந்து சந்தனமடு ஆற்றுக்கு சென்று கொண்டிருந்தபோது சந்தனமடு ஆற்றுக்கு அண்மையில் யானை குறுக்கிட்டு இவரைத் தாக்கியதால் ஸ்தலத்திலேயே அவர் மரணமாகியுள்ளார்.

நேற்று காலை செங்கலடி வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுவரப்பட்டபோது மாவட்ட வைத்திய அதிகாரி கே.சுகுமார் முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரணயதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையை நடத்தினார். சடலத்தை மரணமானவரின் மனைவி கிருஷ்ணப்பிள்ளை மஞ்சுளா அடையாளம் காட்டினார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலமான தாக்குதல் காரணமாக மண்டையோட்டுப்பகுதி நொருங்கியதால் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .