2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

தையல் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட அலங்காரத் தையல் டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்தி செய்த 52 யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவரும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினருமான தெ.சசிகரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வவுணதீவுப் பிரதேச இளைஞர் சேவை அலுவலகர் மா.சசிகுமாரின் முயற்சியினால் சிறுவர் நிதியத்தின் அனுசரணையில் நடத்தப்பட்ட இப்பயிற்சிநெறியை பூர்த்தி செய்த 52 யுவதிகளுக்கு ஏற்கெனவே சைக்கிள்கள் வழங்கப்பட்ட நிலையில் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .