2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இந்த நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தி, இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு சிலர் முயல்கின்றனர்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முற்படும் அதேவேளையில், இன்னுமொரு பகுதியினர் இந்த நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தி, இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டுவருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பு, மண்முனைத்துறைப் பாலத்தின் நிர்மாணப் பணிகளை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்...

இரண்டாக பிளவுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டம் இன்றுடன் ஒன்றுபடுகின்றது. இவ்வாறான வேலைத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசாங்கத்துக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த பாலம் உட்பட ஐந்து பாலங்களை கட்டியெழுப்புவதற்கு உதவி நல்கிய ஜப்பான் நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தூதுவருக்கும் இங்குள்ள மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம்.

பல்வேறுபட்ட காரணங்களால், சூழ்நிலைகளால் பிரிந்துவாழ்ந்த இந்த நாட்டுமக்கள் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் தலைமையில் ஒன்றுபடச் செய்கின்ற மிகப்பெரும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட காரணங்களால் மத ரீதியாக, இன ரீதியாக, பிரதேச, மொழி ரீதியாக பிரிந்து பல ஆண்டுகாலமாக மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒன்றுபட்ட சமூகமாக கொண்டுசெல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்.

அதற்காக பாலங்களை அமைத்து, பாதைகளை அமைத்து மக்களை ஒன்றுசேர்ப்பதற்கான பணியை ஜனாதிபதி மேற்கொண்டுவருகின்றார்.

மதரீதியாக, மொழி ரீதியாக பிளவுபட்டிருந்த மக்களை ஒன்றுபடுத்துவதற்காக மதத் தலைவர்கள், பிரதேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட்டு நிற்கின்றனர்.

இந்த பாலம் அமைக்கப்படுவதனால் பிரதேச ரீதியாக ஒன்றுபடுவதுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பாடசாலை மாணவர்கள் உயர்கல்வியை சிறந்த பாடசாலையில் பெறுவதற்கும், பொதுமக்களின் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவுசெய்தற்கும் இது ஏதுவாக அமையும். இந்த பாலம் மூலம் படுவான்கரை பிரதேச மக்கள் பாரிய நன்மையை அடைவார்கள்.

இந்த பாலத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்துக்கும் இலகுவாக செல்லமுடியும். இதன் மூலம் இரண்டு பிரதேச மக்களும் நன்மையடைவர்.

இந்த நாட்டிலே வாழுகின்ற இரண்டு இன மக்களும் நாங்கள் ஒற்றுமையாக வாழும்போது இரண்டு இனங்களும் ஒற்றுமைப்படுவதன் மூலம் எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

நாங்கள் பிளவுபட்டு இருப்போமானால் மீண்டும் இந்த நாட்டிலே பிரச்சினைகள் ஏற்படுவதோடு, எங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்பட்டு நாங்கள் எல்லோரும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகுவோம்.

ஆகவேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனைத்து இனங்களையும் ஒன்றுபடுத்தி சகல இனங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் சமாதானத்துடன் ஐக்கியத்துடனும் சுபீட்சமான எதிர்காலத்தை வழங்கமுடியும் என எதிர்பார்க்கின்றார்.

ஜனாதிபதி இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் ஒன்றுபடுத்தி, ஐக்கியப்படுத்தி ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க முற்படும் அதேவேளையில் இன்னுமொரு பகுதியினர் இந்த நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தி, இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கவலையடைகின்றோம்.

ஜனாதிபதி - இந்தியா மற்றும் ஜப்பானுக்கு சென்று உதவிகளைப் பெற்று இங்குள்ளவர்களுக்காக பாலங்களை அமைத்து வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை அமைத்து, மின்சாரங்களைக் கொடுத்து இந்த பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றார்.

துரதிர்ஷ்டவஷமாக இந்த நாட்டை மீண்டும் பிளவுபடுத்த விரும்புகின்ற இந்த தலைவர்கள் இந்தியா, ஜப்பான் உட்பட நாடுகளுக்கு சென்று இந்த நாட்டுக்கு உதவவேண்டாம், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவிகளைச் செய்யவேண்டாம் என்று வேண்டுகோள்கள் விடுப்பது கண்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.

இருந்தபோதிலும் இந்த நாட்டு மக்களின் அதிர்ஷ்டம் ஜனாதிபதி எந்த நாட்டுக்கும் சென்று உதவிகளை கேட்கும்போது யாரும் கொடுக்கவேண்டாம் என்று தடுத்தபோதும் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் உங்களுக்காக இவ்வளவு கோடிக்கணக்கான நிதியொதுக்கீட்டை செய்துள்ளதையிட்டு நாங்கள் மிகவும் சந்தோஷமடைகின்றோம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .