2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

திவிநெகும வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் திவிநெகும வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதா, பிரதேச செயலக கணக்காளர் ரெஜணோல்;ட், திவிநெகும நிகழ்ச்சித் திட்டத்திற்கு பொறுப்பான முகாமைத்துவ உதவியாளர் லிங்கேஸ்வரன் காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்;த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கடமையாற்றும் திவிநெகும உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்குரிய திவிநெகும வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .