2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

கோரளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலக ஏற்பாட்டில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சித்திட்டத்திற்கான 'நடமாடும் சேவை' நிகழ்வொன்றை கோரளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகத்தினால் இன்று நடத்தப்பட்டது. 

மட்டக்களப்பு, கிரான் மகா வித்தியாலயத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த நடமாடும் சேவை, மாலை 4 மணிவரை இடம்பெற்றது.

ஆட்பதிவு, பதிவாளர்நாயகத் திணைக்களம், காணி நிர்வாகத் திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், மோட்டார் போக்கு வரத்துத் திணைக்களம், மாகாண சமூக சேவைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம், பிராந்திய சுகாதாரத் திணைக்களம், சிறுகைத்தொழில் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம், தபால் திணைக்களம், கிராம அபிவிருத்தித் திணைக்களம், பிரதேசசபை விவசாயத் திணைக்களம், தென்னை அபிவிருத்திச் சபை, பனை அபிவருத்திச் சபை, நீர்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், இலங்கை மின்சாரசபை, சிறுவர் நன்நடத்தைத் திணைக்களம், சமுர்த்தி அதிகாரசபை ஆகிய திணைக்களங்களினூடான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .