2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

கடலில் மூழ்கிய இளைஞர்களில் ஒருவரை காணவில்லை

A.P.Mathan   / 2012 நவம்பர் 30 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் புன்னைக்குடாக் கடலில் நீராடச் சென்று மூழ்கிய இளைஞர்கள் இருவரில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றையவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை புன்னனைக்குடாக் கடலில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்களாகச் சென்ற அந்த இருவரும் கடலில் இறங்கி உல்லாசமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த அவர்கள் எழுப்பிய கூக்குரல் கேட்டு கரையிலிருந்த மீனவரால் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காப்பாற்றப்பட்டவரான ஏறாவூர் கோயில் வீதியைச் சேர்ந்த 13 வயதான வாலிபர் உடனடியாக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று மாலை மாற்றப்பட்டுள்ளார்.

காணாமல் போனவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .