2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

பனையோலை உற்பத்திப் பொருட்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய முன்வரவேண்டும்

Kogilavani   / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

பனையோலைகளால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை அரசாங்கம் நேரடியாக கொள்வனவு செய்வதற்கு முன்வர வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஏறாவூர் பிரதேசத்தில் பனை ஓலைகளை கொண்டு கூடை, பாய், பூக்கூடை, கைப்பை, தொப்பி மற்றும் திருகாணி போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர்.

தமது கைத்தொழிலுக்கான மூலப் பொருளான 3 பனையோலைகளை நூறு ரூபாய் வீதம் கொள்வனவு செய்யும் இவர்கள், கூடையொன்றினை செய்து முடிப்பதற்காக முழு நாளொன்றினை செலவிடுகின்றனர்.

ஆயினும், இவ்வாறு உற்பத்தி செய்யும் கூடையொன்றினை 110 ரூபாய் எனும் தொகைக்கே மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய நேர்வதாக அவர்கள்; சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வாறான அடிமட்ட விலைக்கு தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் போது,  தமது உழைப்புக்கான நாட்கூலியின் கால்வாசியினைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாக இப் பகுதியிலுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, தமது உற்பத்திப் பொருட்களை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் முன்வர வெண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.                        

                          

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .