2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யாசகம் பெற்றுவந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாழங்குடா பகுதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வளாகத்திலிருந்தே இந்தப் பெண் சடலமாக நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளார்.

சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணினது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் இவர் இந்தப் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்துவந்ததாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை பார்வையிட்ட மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.கருணாகரன்,  பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .