2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாடு சுனாமிக்கு பின்னரே அதிகம்: உதயகுமார்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தியை நோக்கிய செயற்பாடானது சுனாமிக்குப் பின்னர்தான் முழு வேகத்துடன் நடந்து கொண்டிருப்பதாக கிழக்குமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எஸ்.உதயகுமார் கூறினார்.

நேற்று முன்தினம் அம்பாறை மொண்டி ஹோட்டலில் பாம்பவுண்டேசன் அமைப்பின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் நடைபெற்றுவரும் செயற்றிட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்...

சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள் பற்றியும், அங்கு பேணப்படும் ஆவணங்கள் பற்றியும் சனசமூக நிலையமானது அந்தந்த பிரதேச சபைகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் இது என்ன நோக்கத்திற்காக அமைய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.

ஒவ்வொரு பிரதேச சபைகளிலும் வாழும் மக்கள் அந்த பிரதேச சபைகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணவேண்டும். இதற்கு சனசமூக நிலையங்களின் செயற்பாடு இன்றியமையாததாகும். இதற்காகவேண்டி அனைவரும் பாடுபடவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் அந்தப்பிரதேசத்தில் இருந்துதான் அதிகளவான திட்டங்கள் எமக்குக்கிடைத்துள்ளன. இது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

சில இடங்களில் உள்ள பிரதேச சபைகள் இன்றும் இயங்காத் தன்மையாகவே செயற்பட்டுக் கொண்டிருப்பது தற்காலச்செயற்பாட்டிற்கு பொருத்தமில்லாத் தன்மையினையே எடுத்துக்காட்டுகின்றது.

உள்ளூராட்சி மன்றத்தின் செயற்பாடானது வசதிகளை செய்துகொடுப்பதிலே முன்னின்று உழைக்கும். மக்களின் நன்மைக்கும் வருமானத்தினை அதிகரிப்பதற்கும் பாம்பவுன்டேசன் நிறுவனத்தினைப் பயன்படுத்தமுடியும் எனவும் கூறினார்.

பாம் பாவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் சுனில் தொம்பேபல தலைமையில் இந்நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜெ.எம்.இர்ஸாத், திருக்கோயில் பிரதேச செயலாளர் டாக்டர் கோபாலரெத்தினம், பாம்பவுண்டேசன் அமைப்பின் கிழக்கு மாகண திட்ட முகாமையாளர் எஸ்.பாஸ்கரன், பிரக்டிக்கல் அக்சன் குழுத் தலைவர் ரங்க பல்லாவெல, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உதவித் தவிசாளர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியங்கள், பிரதேச விவசாய சங்கங்களின் ஒன்றியங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .