2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வவுணதீவில் வறுமையற்றதோர் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புதல் தொடர்பிலான செயலமர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்
, சிஹாறா லத்திப்

திவிநெகும திட்டத்தினூடாக 'வறுமையற்றதோர் இலங்கைத்தேசத்தை கட்டியெழுப்புதல்' செயலமர்வு நேற்று புதன்கிழமை வவுணதீவுப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கன்னன்குடா மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுணதீவுப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், அ.நடராசா, பிரதேச செயலாளர் வெ.தவராசா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் திணைக்களத் தலைவர்கள் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் பிரதேச மட்ட அதிகாரிகளும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

திவிநெகுமச் சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் எதிர்த்த நிலையில் தற்போது மட்டக்களப்பில் பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்று வரும் இச்செயலமர்வுகளில் கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .