2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தொப்பிகலயில் ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2013 ஜனவரி 17 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


மட்டக்களப்பு, தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்னவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்கா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

ஆர்.பி.ஜி சாஜர் 20, 60 ரக மோட்டார் குண்டு 4, ஆர்.பி.ஜி குண்டு 4, 60 ரக மோட்டார் குண்டு சாஜர் 6 ஆகியவற்றை உறப்பையில் கட்டி புதைக்கப்பட்ட நிலையில் இருந்து மீட்டுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர்  லாள் செனவிரத்ன தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .