2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கிழக்கு மாகாண அமைச்சரின் சம்பளப் பணம் பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிப்பு

Super User   / 2013 ஜனவரி 30 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது மாதாந்த சம்பளப் பணத்தினை ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளித்தார்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள 08 பள்ளிவாசல்களின் நிருவாகத்தினரை அண்மையில் சந்தித்த மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் - பணத்தொகையினை அவர்களிடம் கையளித்தார்.

ஏறாவூர் பிரதேசத்துக்குட்பட்ட தாமரைக்கேணி தக்வா பள்ளிவாசல், முஹாஜிரீன் பள்ளிவாசல், மையவடியிலுள்ள ஹில்ர் பள்ளிவாசல், ஹிதாயத் நகர் சாலிஹீன் பள்ளிவாசல், வடிச்சல் கிராமம் ஜும்ஆ பள்ளிவாசல், ஜின்னா வீதி மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாசல், இஸாதுல் இஸ்லாம் பள்ளிவாசல் மற்றும் ஷாதுலி பள்ளிவாசல் ஆகியவற்றின் நிருவாகத்தினரிடமே அவர்களுக்கான பணத்தொகை கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் மற்றும் அமைச்சர் எனும் வகையில் தான் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தினை பள்ளிவாயல்களுக்கு வழங்குவது எனும் அமைச்சரின் தீர்மானத்துக்கு அமைவாகவே மேற்படி பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அமைச்சரின் சம்பளத்தினை வழங்குவதற்கான பள்ளிவாசல்களைத் தெரிவு செய்வதற்கென குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. வருமானம் குறைந்த பள்ளிவாசல்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய பள்ளிவாசல்களுக்கும் அமைச்சரின் மாதாந்தச் சம்பள பணம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .