2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 02 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,-ரி.லோஹித்

மூன்றரை வயதுக் குழந்தை ஒன்றின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணி ரெட்பானா புரம் பகுதியிலுள்ள வீட்டொன்றிலுள்ள கிணற்றிலிருந்தே குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டது.

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்துள்ளது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கிணற்றிலிருந்து நீரை அள்ளி எடுப்பதற்கு வாளியை கிணற்றினுள் போட்டபோது குழந்தையின் சடலம் வாளியில் சிக்கியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பி.விதுஷன என்ற குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சடலம்  ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .