2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வேளாண்மை அறுவடை இயந்திரம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

வேளாண்மை அறுவடை இயந்திரமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலிருந்து வாடகை அடிப்படையில் வேளாண்மை அறுவடைக்காக கொண்டுவரப்பட்ட அறுவடை இயந்திரமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக இவ்வியந்திரத்தை வாடகைக்கு பெற்றுவந்தவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .