2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மாவடியோடை பாலத்திற்கான புனரமைப்புப் பணிகள் முன்னெடுப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடியோடை பாலத்திற்கான புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தாலும் குளங்கள் திறக்கப்பட்டதாலும்  மாவடியோடை பாலத்தின் இருபக்கங்களும் முழுமையாகச் சேதமடைந்தன. இந்நிலையிலேயே இப்பாலத்திற்கான புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

கமநல அமைப்புக்களும் விவசாயத் திட்ட முகாமைத்துவ குழுவினர்களும் இணைந்து இப்பாலத்தை புனரமைத்துவருகின்றனர்.

இப்பாலத்தின் புனரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டுள்ளனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .