2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

களுவன்கேணியில் இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தொழிலுக்காகச் சென்ற இளைஞர் ஒருவரின் சடலத்தை நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.

களுவன்கேணி மாணிக்கவாசகர் வீதியைச் சேர்ந்த செல்வராஜா ஜனூராஜ் (வயது 20) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  களுவன்கேணிக் காட்டுப்பகுதியிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை காலை வலை இழுப்பதற்காக கடலுக்குச் சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பததால் அவரை தேடிச் சென்று பார்த்தபோது காட்டில் அவர் சடலமாக  காணப்பட்டதாக தாயார் தெரிவித்தார்.

சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .