2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டக்களப்பில் மீண்டும் கடும் மழை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,-சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரையான  24 மணித்தியாலங்களில்   55.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையாலும் மழையாலும் வெள்ளத்தாலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தாழ்நிலப்பகுதிகளில் மீண்டும் நீர் தேங்க ஆரம்பித்துள்ளதுடன், பரந்தளவில் நெற்செய்கை பண்ணப்பட்ட செங்கலடி பதுளை வீதி, வாகரை, உன்னிச்சை போன்ற வயல் பிரதேசங்கள்  கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

செங்கலடி - பதுளை வீதிப் பகுதியிலும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலும்  அறுவடைக்குத் தயாராகவிருந்த பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதால் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் அவற்றைக் கைவிட்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .