2026 மே 05, செவ்வாய்க்கிழமை

கால் தடுக்கி விழுந்த மாணவன் மரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கால் தடுக்கி விழுந்து மூன்று நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த மாணவனொருவன் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளான்.

கல்முனைக்குடி ஸாஹிபு வீதியைச் சேர்ந்த ஏ.எஸ்.ஸஹ்ரான் அஹமட் (வயது 11) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலத்தில் 6ஆம் தரத்தில் இம்மாணவன் கல்வி கற்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

கடந்த முதலாம் திகதி இவர் பாடசாலையில் இடைவேளை நேரத்தில் கால் தடுக்கி விழுந்துள்ளார். இந்நிலையில், உடனடியாக  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இம்மாணவன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மரண விசாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .