2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


அதிகரித்துவரும் கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பெண்நோயியல் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எஸ்.எச்.எம்.ஸிராஜ் நடத்திய இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

நீண்ட நோயற்ற ஆயுளை பெண்களுக்கு வழங்கும் நோக்குடன் கிழக்கு மாகாணம் எங்கும் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எஸ்.எச்.எம்.ஸிராஜ் தெரிவித்தார்.

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் நோயாக இனங்காணப்பட்டுள்ள நோய்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோயும் ஒன்றாகும். இது பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வை பெண்களுக்கு ஊட்டுவதன் மூலம் முன்கூட்டியே இந்நோயை அறிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளை பெற்று இந்நோயால் ஏற்படக்கூடிய மரணத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம். இதன் காரணமாகவே இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் அனைவரும் தத்தமது பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குச் சென்று இப்பரிசோதனையை செய்துகொண்டால் கர்ப்பப்பை வாசல் புற்றுநோயால் ஏற்படக்கூடிய உயிராபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளலாமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .