2026 மே 06, புதன்கிழமை

பெரியபுல்லுமலையில் சந்தை, பஸ்தரிப்பிட நிர்மாண வேலைகள் நிறைவடையும் நிலையில் உள்ளன

Kanagaraj   / 2013 மார்ச் 10 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பெரியபுல்லுமலை மக்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தை மற்றும் பஸ் தரிப்பிட நிர்மாணப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

பெரியபுல்லுமலை பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் இவைகள் நிர்மாணிக்கப்ட்டுவருக்கின்றன.

அண்மைய மழை மற்றும் வெள்ளம் காரணமாக தடங்கல்களை எதிர்கொண்டு தற்போது நடைபெற்றுவரும் இக்கட்டங்களின் நிர்மாண வேலைகளை யூ.எஸ்.எயிட் (அnரிக்க உதவி ) நிறுவனத்தின் பிரதிநிதிகள் அண்மையில் சென்று பார்வையிட்டனர்.

இதன் போது, யூ.எஸ்.எயிட்  நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஏறாவூர் பற்று பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர், செயலக கிராம அபிவிருத்திச் சங்கப்பிரதிநிதிகள், சர்வோதயம் அமைப்பின் பிரதிநிதிகள், பொறியியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களின் எல்லையில் உள்ள, யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரிய புல்லுமலைப்பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தப்பட்ட தமிழ், சிங்கள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அமெரிக்க மக்களின் நிதியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு கருத்துத் தெரிவித்த யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிரதிநிதி, பெப்ரவரி மாதத்தில் நிறைவடைய வேண்டிய கட்டடங்களின் வேலைகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும், அவற்றை நிறைவு செய்தே மக்களிடம் ஒப்படைப்போம் இடையில் விலக மாட்டோம் என்ற வாக்குறுதியை வழங்கினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .