2026 மே 05, செவ்வாய்க்கிழமை

சுற்றுலா சென்ற மாணவன் பாசிக்குடாவில் பலி

A.P.Mathan   / 2013 மார்ச் 15 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.அனுருத்தன்

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் உள்ள தோணாவில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 13 வயது மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றின் கல்வி கற்கும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்க்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை பாசிக்குடா கடற்கரைக்கு வந்திருந்தனர்.

இதன்போது பொலிஸாரினால் சுற்றுலா பயணிகளுக்கென குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பிரதேசத்தில் (தோணவில்) குளித்துக் கொண்டிருக்கும்போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கசுன் (வயது 13) என்ற மாணவனே இவ்வனர்த்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .