2026 மே 05, செவ்வாய்க்கிழமை

'பர்தாவை' அபகரிக்க முயற்சி

Super User   / 2013 மார்ச் 18 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தா இனந்தெரியாத குழுவினரால் இன்று திங்கட்கிழமை காலை அபகரிப்பதற்கான முயற்சியொன்று மன்னம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னம்பிட்டி தபால் நிலையத்தில் தபாலக அதிபராக பணி புரியும் பெண்ணின் பர்தாவையே இனந்தெரியாத குழுவினரால் அபகரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள தபாலகத்திற்கு நடந்து செல்லும்போதே மன்னம்பிட்டி பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளிலில் வந்த இந்த குழுவினர் தலைகவசம் அணிந்திருந்தமையினால் குறித்த பெண்ணினால் இந்த குழுவினரை இனங்காண முடியாது போயுள்ளது. மன்னம்பிட்டி தபால் நிலைய தபால் அதிபராக கடந்த பெப்ரவரி மாதம் இந்த பெண் நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வேலை முடிந்து திரும்பும்போதும் ஒரு குழுவினரால் பர்தாவை கழற்றுமாறு இந்த பெண் வேண்டப்பட்டுள்ளார்.எனினும் இதனை குறித்த பெண் கவனத்திற்கு கொள்ளவில்லை. இதனையடுத்தே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மன்னப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக கிழக்கு மாகாண தபால் மா அதிபரின் கவனத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீர் அலி கொண்டுவந்துள்ளார்.

  Comments - 0

  • isam Monday, 18 March 2013 11:18 AM

    மன்னம்பிட்டி கிழக்கு மாகாணம் இல்லை அமீர் அலி ..
    அது வட மேல் மாகாணம். ஆஹாவே நீங்க வட மேல் மாகாணம் தபால் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவரணும்...

    Reply : 0       0

    IBNU ABOO. Monday, 18 March 2013 12:18 PM

    பர்தாவில் கை வைக்கவில்லை, அல்லாஹ்வின் சட்டத்தில் கை வைத்துள்ளார்கள். அல்லாஹ்வே தண்டனை அளிக்க போதுமானவன்...

    Reply : 0       0

    Thazwon Monday, 18 March 2013 03:43 PM

    அரைநிர்வாணக் கோலத்தில் கடற்கரையில் உலாவித் திரியும் ஆண்களும் பெண்களும், பொது பல சேனவின் கண்ணுக்குத் தெரியவில்லை.நாட்டில் பரந்து காணப்படும் மதுக்கடைகளும், குடிகாரர்களும், சூதாட்ட, களியாட்ட, விபசார விடுதிகளும் பொது பல சேனாவின் கண்களுக்கு இருட்டிவிட்டது.

    Reply : 0       0

    vallarasu Monday, 18 March 2013 03:44 PM

    சகோதரியே சற்றுப்பொறுத்திருங்கள்... இதற்கு அல்லாஹ் கூலி கொடுப்பான்.

    Reply : 0       0

    MADURANKULI KURANKAR Monday, 18 March 2013 03:46 PM

    அல்லாஹ் இப்போதே தண்டனை அளிக்க ஆரம்பித்து விட்டான்..!!

    Reply : 0       0

    Hari Monday, 18 March 2013 05:14 PM

    முஸ்லிம்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எவ்வாறான தாக்குதல் வரும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .