2026 மே 06, புதன்கிழமை

பிரதம நீதியரசர் மட்டு. விஜயம்

Super User   / 2013 மார்ச் 19 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன், சிவம் பாக்கியநாதன்


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், முதலில் மட்டு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னைய்யா ஜோசப்பை சந்தித்து ஆசி பெற்றார். இந்த சந்திப்பு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிவபாதசுந்தரம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க தலைவர் வினோபா இந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விஜயம் செய்தார். இதன்போது இவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்  சட்டத்தரணி வினோபா இந்திரன் தலைமையில் இந்த வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்போது நீதிமன்ற கட்டிட வளாகத்தில் பிரதம நீதியரசருக்கான பொலிஸ் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் கலந்துகொண்டார்.சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதி நிதிகள், சட்டத்தரணிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற பதிவாளர்கள் நீதிமன்ற உத்தியோகத்தாக்ள கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .