2026 மே 06, புதன்கிழமை

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து காத்தான்குடியில் சுவரொட்டிகள்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


இந்த மாதம் 25ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறவுள்ள முழு எதிர்ப்புப் பேராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் வகையிலும் தெயட்ட கிருள கண்காட்சியை பகிஷ்கரிக்குமாறும்  முஸ்லிம்களைக் கோரும் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் வைக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடியின் பல பகுதிகளிலும் இந்தச் சுவரொட்டிகள்  வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறான சுவரொட்டி ஒன்று காத்தான்குடி ஹர்பலா வீதியில் உள்ள நூரானியா பள்ளிவாசல் சுவரிலும்; பொருத்தப்பட்டுள்ளது.

அம்பாறை தெயட்ட கிருள கண்காட்சியை முற்றுமுழுதாகப் பகிஷ்கரித்தல், ஹராமான உணவுகளை இனங்கண்டு தெரியப்படுத்தல், 25ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள சாத்வீகப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குதல், முஸ்லிம் அமைச்சர்களே அரசிலிருந்து வெளியேறுங்கள், முஸ்லிம் பெண்களே அபாயா விடயத்தில் அபாயாவை அணிந்து முஸ்லிம்களின் தனித்துவத்தை அடையாளம் காட்டுங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .