2026 மே 05, செவ்வாய்க்கிழமை

பணிச்சங்கேணி பிரதேசத்தில் மனித எலும்புக் கூடுகள் மீட்பு

Kogilavani   / 2013 மார்ச் 23 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன், எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு, பணிச்சங்கேணி பிரதேசத்தில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
பணிச்சங்கேணி- எல்லத்தீவு பிரதேசத்திலேயே இன்று சனிக்கிழமை இவ் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் உணவு விடுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளில்   ஈடுபட்டபோதே இந்த எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டல் நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இவ் எச்சங்கள் கொண்ட புதைகுழியைக் கண்டு வாகரைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து அப்பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார் ஹோட்டல் நிர்மாண வேலைகளை நிறுத்தி பாதுபாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .