2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியரின் தாலிக்கொடி அபகரிப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 24 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச்சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  திராய்மடு பகுதியிலேயே நேற்று சனிக்கிழமை பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பார் வீதியை சேர்ந்த கோபாலகிருஸ்ணன் சீனித்தம்பி சுசிலாதேவி (வயது 61) என்பவரது தாலிக்கொடியே பறித்துச்செல்லப்பட்டுள்ளது.

மேற்படி ஆசிரியர் திராய்மடு பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இவரது தாலிக்கொடி பறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பறிக்கப்பட்ட  தாலிக்கொடி 10 பவுண் நிறையுடையது எனவும்; சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி எனவும் நேற்று சனிக்கிழமை மாலை ஆசிரியர் செய்த  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .