2026 மே 06, புதன்கிழமை

சட்டவிரோதமாக மரங்களை ஏற்றி வந்த இருவர் கைது

Super User   / 2013 மார்ச் 25 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித், ஆர்.அனுருத்தன்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புனானை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை ஏற்றி வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, மரங்களை ஏற்றி வந்த வாகனம் மற்றும் மரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தீர்வு காணமுடியாத குற்றங்களுக்கான பொறுப்பதிகாரி எஸ்.ஜ.மாயாரஞ்சன் தலைமையிலான பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புனானைக் காட்டுப் பகுதியில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்ல இருந்த வேளையில் இந்த மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுர மரம், விலின மரம் உட்பட இருபத்தைந்து மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வானமும் சந்தேக நபர்கள் இருவரையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தீர்வு காணமுடியாத குற்றங்களுக்கான பொறுப்பதிகாரி எஸ்.ஜ.மாயாரஞ்சன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதியில் இருந்து மிக நீண்ட காலமாக சட்டவிரோத மர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .