2026 மே 06, புதன்கிழமை

வாகரையில் வைத்திய முகாம் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


கிழக்கு மாகாண படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் வைத்திய முகாம் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

'உடல் ஆரோக்கியமும் கிராம வளர்ச்சியும்' என்ற தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த வைத்திய முகாம் கண்காட்சி  நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற வைத்திய முகாம் கண்காட்சியில் களனிப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், விவசாயத் திணைக்களம் உள்ளிட்டவையும் பங்குபற்றியிருந்தன.

இதன்போது கண் பரிசோதனை, உடல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை அங்கவீனர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பரிசுப் பொருட்களும் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா இந்த வைத்திய முகாம் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதில் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, 233ஆவது  பிரிகேடியர் அத்துல கொடிப்பிலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .