2026 மே 06, புதன்கிழமை

ரயிலில் மோதுண்டு மூதாட்டி பலி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 08 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்டு சுமார் எழுபது வயது மதிக்கத் தக்க மூதாட்டியொருவர் மரணித்துள்ளார்.

இந்த விபத்து மட்டக்களப்பு கொழும்பு புகையிரதப்பாதையில் 215 வது மைல் கல்லில் திராய்மடு எனுமிடத்தில் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நிலையில் கிடந்த மூதாட்டியை புகையிரத அதிகாரிகள் அடுத்துள்ள ஏறாவூர் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். எனினும் அப்பொழுது அவரது உயிர் பிரிந்து விட்டிருந்ததாக ஏறாவூர் புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

தற்சமயம் உடல் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் நிலைய அதிபர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .