2026 மே 06, புதன்கிழமை

வெலிகாகண்டி கிராமத்தின் பிரதான வீதி உடைந்ததால் மக்கள் அசௌகரியம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று -வெலிகாகண்டி கிராமத்தின் பிரதான வீதி உடைந்து காணப்படுவதனால் இக்கிராம மக்கள் மழைக்காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இப்பாலமானது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போதிலும்  வீதி முறையாக அமைக்கப்படாமையினால் மழைக்காலத்தில் வெலிக்காகண்டி குளத்திலிருந்து நீர் வெளியாகி வீதியில் கரைபுரண்டு ஓடுவதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையை தாம் எதிர்கொள்வதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெள்ளநீரில் இவ்வீதி மூழ்கும்போது, 10  கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பிரயாணம் செய்ய வேண்டியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி இவ்வீதியை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .