2026 மே 06, புதன்கிழமை

வட்டிக்குளத்தில் சீரான நீர்ப்பாய்ச்சல் இன்மைக் காரணமாக விவசாயிகள் பாதிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு, வட்டிக்குளத்தில் சீரான நீர்ப்பாய்ச்சல் இன்மைக் காரணமாக காலபோக விளைச்சலுக்கு தயாராகும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப்பற்று விவசாயிகளே இவ்வாறு பாதிப்படைந்துவருகின்றனர்.

இவ் விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் வேளான்மைகளுக்கு சீரான நீர்ப்பாய்ச்சல இன்மையால் தண்ணீர் பம்பி ஊடாக நீர்ப்பாய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வெள்ள அனர்த்தங்களினால் பல தடவைகள் நட்டத்தினை எதிர்கொண்ட இவ் விவசாயிகள் இம்முறை காலபோகத்திலும்மீண்டும் நீர்ப்பாய்ச்சல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால், எரிபொருளுக்கு வீண்செலவு செய்யவேண்டி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பில் கவனம் செலுத்தி சீரான நீர்ப்பாய்சலுக்கான வழிகளை ஏற்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .