2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் புதிய நெற்களஞ்சியசாலைகள் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 புதிய நெற்களஞ்சியசாலைகள்; நிறுவப்படவுள்ளதாக மாவட்ட கட்டிட திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் அனுசரணையுடன் 'தேசத்திற்கு மகுடம்' வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா செலவில் இந்த நெற்களஞ்சியசாலைகள் நிறுவப்படவுள்ளன.

அரசடிச்சேனை, கரடியனாறு, தும்பங்கேணி, கொக்கட்டிச்சோலை, புலிபாய்ந்தகல், மருதங்கேணி ஆகிய இடங்களிலேயே  தலா 19 இலட்சம் ரூபா செலவில் இந்த நெற்களஞ்சியசாலைகள் நிறுவப்படவுள்ளன.

இந்த மாத இறுதியில் இதன் ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .