2026 மே 06, புதன்கிழமை

'உள்ளூராட்சிமன்றங்களை பொறுப்பேற்றுள்ள செயலாளர்கள் மக்களின் தேவைகளை கருத்தில்கொள்ள வேண்டும்'

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.நூர்தீன்

'மட்டக்களப்பில் உள்ளூராட்சிமன்றங்களை பொறுப்பேற்றுள்ள செயலாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு அடிபணியாமல் மக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு சேவையாற்ற முன்வரவேண்டும்' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்களை சந்தித்து மேற்கொண்ட கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிகளின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக கொண்டுசெல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் அவற்றின் அதிகாரங்கள் உள்ளூராட்சி செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் அவற்றின் பயன்பாடுகள் முழுமையாக மக்களைச் சென்றடையவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

கடந்த காலத்தைபோல் அல்லாமல் அதிகாரிகள் நீங்கள் சிறந்தமுறையில் செயற்படவேண்டும். உங்களுக்கு சில மிரட்டல்கள் விடுத்ததாகவும் எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நீங்கள் அவை தொடர்பில் அஞ்சவேண்டிய அவசியமில்லை. உங்கள் பணியை நீங்கள் சிறந்தமுறையில் செய்யுங்கள்.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இவற்றினை ஒளியூட்டுவதற்கான நடவடிக்கையினை மாநகசபை மேற்கொள்ளவேண்டும். அதிக வருமானமீட்டும் மாநகரசபையாகவுள்ள நிலையில் அவற்றினை திறம்படச் செய்யவேண்டும' என்றார்.

மட்டக்களப்பு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அற்ற பிரதேசசபைகள், மாநகரசபை ஆகியவற்றின் செயலாளர்கள், ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் சத்தியானந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • vallarasu Friday, 19 April 2013 11:38 AM

    தேர்தல் வந்துட்டு போல, அண்ணாச்சி இவ்வளவு அக்கறை காட்டுகிறார் ந‌ம்மீது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .