2026 மே 06, புதன்கிழமை

வாகரை விபத்தில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கதிரவெளியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்ததோடு மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர்.
வாகரையில் பொலிஸாரும் பொதுமக்களும் படையினரும் இணைந்து நடாத்திய இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்து விட்டு இவர்கள் வெருகல் விநாயகபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்து சம்பவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்து விட்டு மோட்டார் சைக்கிளில் மூவர் வேகமாகச் சென்ற வேளையில் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிள் பல முறை தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த மூவரில் படுகாயமடைந்தவர் உடனடியாக ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றிய போதும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை மரணமடைந்ததாக ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையின் கடமை வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

விநாயகபுரத்தைச் சேர்ந்த 27 வயதான செல்வநாயகம் குகன் என்பவரே பலியாகியுள்ளார். இவரே மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவரென்றும் அவருக்கு ஏற்கெனவே ஒரு கால் அங்கவீனமடைந்துள்ளது  என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்த மற்றைய இருவரில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் இன்னொருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில் வாகரைப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .