2026 மே 06, புதன்கிழமை

தாண்டியடியில் நிலையான விவசாய வள நிலையம் திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி கிராமத்தில் நிலையான விவசாய வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்த நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதுமண்டபத்தடி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளின் நலன் கருதி 32 இலட்சம் ரூபா செலவில் இந்த நிலையான விவசாய வள நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் அனுசரணையுடனும் சர்வோதய நிறுவனம் இந்தத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.

இதன்போது சட்ட ரீதியான காணி ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல் கைநூலும் வெளியிடப்பட்டது.

இதற்கான நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் பெ. தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரதி; திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம், ஒக்ஸ்பாம் நிறுவன திட்ட அதிகாரி வி.சரவணபவன், சர்வோதய தேசிய மட்ட திட்ட முகாமையாளர் வி.கலைக்குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .