2026 மே 06, புதன்கிழமை

தேசிய மட்டத்தில் மட்டு. மத்தி கல்வி வலயத்திற்கு முதலாமிடம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சையின் முடிவுகளின் படி  தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 83.4 சதவீதங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.

79 சதவீதங்களை பெற்று கண்டி வலயம் இரண்டாவது இடத்தினையும் 77 சதவீதங்களை பெற்று கொழும்பு வலயம் மூன்றாவது இடத்தினையும் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கடந்த 2011ஆம் ஆண்டும் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர், காத்தான்குடி கல்விக் கோட்டங்கள் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .