2026 மே 06, புதன்கிழமை

கடலரிப்பால் அழியும் பாலமீன்மடு மீன்பிடி இறங்குதுறைக்கட்டிடம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


தொடர்ந்து இடம்பெறும் கடலரிப்பு காரணமாக பாலமீன்மடுவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதுறை கட்டிடம் அழிவடையும் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக பாலமீன்மடு மீனவர் அமைப்பின் தலைவர் கே.பிரேமன் தெரிவித்தார்.

கடலரிப்பு காரணமாக கட்டிடத்தின் அத்திவாரம் சிதைவடைந்து வருவதாகவும் இதனை தடுக்க தடுப்பு சுவரினை அமைக்குமாறும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த கடலரிப்பிற்குள்ளாகிவரும் இடத்தினை மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமின்கு ஜோர்ஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .