2026 மே 06, புதன்கிழமை

செங்கலடி இரட்டைக்கொலைக்கு பாடசாலையை குற்றஞ்சாட்ட முடியாது: சந்திரகாந்தன்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜௌபர்கான்

செங்கலடியில் இடம்பெற்ற இரண்டைக் கொலையுடன் செங்கலடி மத்திய கல்லூரியைச் சோந்த நான்கு மாணவர்கள் சம்பந்தப்பட்டார்கள் என்பதற்காக முழுப் பாடசாலையையும் குற்றஞ்சாட்ட முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதுலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலாசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

செங்கலடி மத்திய கல்லூரியின் நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்காக அக்கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

செங்கலடி மத்திய கல்லூரி முழு மாணவர்களை செங்கலடியில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள்.

இதனால் பாடசாலை நிருவாகம் முற்றாக சீர்குலைந்திருந்தது. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவந்தன. அதிபர் மற்றும் சில குறிப்பிட்ட ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஓர் சாராரும் அவ்வாறு இடம்பெறக்கூடாது என இன்னொரு சாராரும் வாதப் பிரதிவாதங்களை செய்துகொண்டிருந்தார்கள். இதன் வெளிப்பாடாக ஒரு சிலதுண்டுப் பிரசுரங்களும் வெளிவந்தன.

மேற்குறித்த நிலைமைகளை ஆராய்ந்த சிவநேசதுரை சந்திரகாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர், செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள்,பெற்றோர்கள் ஆகியோரிடம் விசேட கலந்துரையாடல் ஒன்றறை மேற்கொண்டிருந்தார். அக்கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிலமைஏற்பட்டிருப்பது உண்மையில்க வலைக்குரிய விடயமாகும். எனவே தொடர்ந்து நாங்கள் கல்வியிலே வளர்ச்சி காணவேண்டும். அதற்கு இது போன்ற சம்பவம் ஓர் தடைக்கல்லாகஅமைந்துவிடக்கூடாது. இன்றிலிருந்து நாம் அனைவரும் இப்பாடசாலையின் நற் பெயருக்கு கலங்கம் ஏற்படாத வண்ணம் செயற்படுவதற்;கு திடசங்கர்ப்பம் பூணவேண்டும்.

அதேவேளை, 'தொடர்ந்து வருகின்ற காலங்களில் இந்தப் பாடசாலை ஏனைய பாடசாலைகளுக்கு ஓர் முன்னுதாரணமான பாடசாலையாகவும் நல்ல பெறுபேறுகளை எங்களது மாவட்டத்திற்க்கு வழங்கி நற்பெயருடன் திகழ பெற்றோர்கள் ஆசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலை மாணவர்கள், ஏனையோர்கள் அனைவரும் செயல்பட வேண்டும்' என சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .