2026 மே 06, புதன்கிழமை

தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் வாகரையில் வீடுகள் நிர்மாணம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குகநேசபுரம் கிராமத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.  இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த புதன்கிழமை வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திகாந்தன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்களிலுள்ள பல வீடுகள் யானைகளின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. அவ்வாறான வீடுகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .