2026 மே 06, புதன்கிழமை

சீலாமுனை களப்பிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சசிகுமார், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சீலாமுனை களப்பில் இருந்து இன்று காலை ஆணின் சடலம் ஒன்று மட்டக்களப்புப் பொலிஸாரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம், நொச்சிமுனையைச் சேர்ந்த குலேந்திரராசா அருள்குமரன் (44 வயது) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் உல்லாசமாக களப்பிற்கு மீன்பிடிக்க நேற்று மாலை களப்பிற்குச் சென்ற போது தோணியில் இருந்து தவறி வீழ்ந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மட்டக்களப்புப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .